காதலால் நடந்த‌ கத்திக்குத்து..!! கடுமையான காயங்களுடன் இளைஞன் வைத்தியசாலையில்..!

நேற்றய தினம் கஹதுடுவ பொலிஸ் பிரிவில் இளைஞன் ஒருவர் தனது முன்னால் காதலியுடன் வேறு ஒரு இளைஞன் காதல் தொடர்பை கொண்டிருந்ததால் ஆத்திரமுற்ற முன்னால் காதலன் குறித்த இளைஞனுக்கு கத்தியால் கழுத்தில் குத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்ட இளைஞன் தப்பிச் சென்றுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதலுக்கு உள்ளாகிய இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ள இந்த சந்தேகநபருடன் யுவதி காதல் தொடர்பை கொண்டிருந்தார். அந்த தொடர்பை சில மாதங்களுக்கு முன்னர் நிறுத்திக்கொண்டார். அதன் பின்னரே, தற்போது கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞனுடன் காதலை துளிர்விட்டுள்ளாள் என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.