என்னுடைய இந்த தொழிலை புரிந்து கொள்ளும் நபராக இருக்க வேண்டும்..!! திருமண வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசிய மிருணாள் தாகூர்..!

முன்னதாக பாலிவுட் படங்களில் நடித்த நடிகை மிருணாள் தாகூர், துல்கர் சல்மான் நடித்த சீதா ராமம் படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.இப்படத்திற்கு பிறகு நானியின் ஹாய் நானா படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்திருந்தார் இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படமாக அமைந்திருந்தது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மிருணாள் தாகூர் திருமண வாழ்க்கை குறித்து பேசியுள்ளார் அதில் அவர் கூறுகையில் வேலையையும் வாழ்க்கையையும் சமநிலைப்படுத்துவது முக்கியம், என்றார்.அடை எப்படி சமநிலைப்படுத்துவது என்று எல்லோரும் யோசிக்கிறார்கள்.உறவுகள் கடினமானவை என்பதை நாம் அறிவோம்.

சரியான துணையை தேர்ந்து எடுப்பதும் கடினம். ஆனாலும் நாம் சரியானதைக் கண்டுபிடிக்க வேண்டும். எங்கள் தொழில் வாழ்க்கையை புரிந்துகொள்ளும் நபராக இருக்க வேண்டும் என்று மிருணாள் தாகூர் கூறியுள்ளார்.