வெளியானது X தளத்தின் புதிய அப்டேட்..!!

எலோன் மஸ்க்கின் சமூக ஊடக தளமான எக்ஸ் ஒரு முக்கிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.இவருடைய டெஸ்லா நிறுவனம் மின்சார கார்கள் தயாரிப்பில் உலகப் புகழ்பெற்றது.இதற்கிடையில், எலோன் மஸ்க்கின் சமூக ஊடக தளமான எக்ஸ் ஒரு முக்கிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இது நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டது. ஆடியோ மற்றும் வீடியோ அழைப்பு அம்சம் X இல் பல மாதங்களாகச் சோதிக்கப்பட்டு வந்தது, இப்போது அது ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக வெளியிடப்படுகிறது.

X அறிக்கையின்படி, “ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான ஆடியோ மற்றும் வீடியோ அழைப்பு அம்சத்தை X இப்போது வெளியிடத் தொடங்கியுள்ளது.பல பயனர்கள் அதன் புதுப்பிப்பைப் பெற்றுள்ளனர். ஆனால் இன்னும் பலர் அதைப் பெறவில்லை. இது அடுத்த சில நாட்களில் கிடைக்கும்.நீங்களும் ஒரு X பயனராக இருந்து இந்த அம்சத்தை விரும்பினால். உங்கள் x செயலியைப் புதுப்பிக்கவும். இதில் மூன்று அழைப்பு விருப்பங்கள் உள்ளன.யார் அழைக்கலாம் மற்றும் யார் அழைக்க முடியாது என மூன்று விருப்பங்கள் வழங்கப்படும். குறிப்பாக, x ப்ளூவுக்கு சந்தா செலுத்தியவர்கள் மட்டுமே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்” என்று X அறிக்கை கூறுகிறது.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *