லிட்ரோ எரிவாயுவின் விலைதிருத்தம் குறித்து லிட்ரோ நிறுவனம் வழங்கிய அறிவிப்பு..!

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் இந்த மாதம் மாற்றம் இருக்காது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.கடந்த மாதம் இருந்த அதே விலையினையே எந்த மாற்றமும் இல்லாமல் இந்த மாதமும் பேணுவதற்கு அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.மாதாந்த விலை திருத்தத்திற்கமைய எரிவாயுவின் விலை இன்று(01) முதல் நடைமுறைக்கு வரும் திருத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

எனினும், மாற்றங்கள் எதுவும் இன்றி அதே விலையை இம்மாதத்திலும் பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, மாதாந்த விலை திருத்தத்திற்கு அமைய எரிபொருளின் விலையில் இன்று முதல் மாற்றம் செய்ய வேண்டி இருந்த போதிலும், தற்போதுள்ள எரிபொருள் விலையை திருத்தம் இன்றி மார்ச் மாதத்தில் தக்கவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.