தொலை பேசியை விற்று மாட்டிக்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்..!!

கைதி ஒருவரின் தொலைபேசியை விற்று பணமாக்கிய பொலிஸார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் அம்பாறை பகுதியில் இடம் பெற்றுள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் 58,000 ரூபா பெறுமதியான தொலைபேசியை பொலிஸ் அதிகாரி 5,000 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேக நபரின் முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.