சற்றுமுன் வெளியான தகவல் லிட்ரோ எரிவாயுவின் விலையில் மாற்றம்..!!

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இன்று (03.05.2024) நள்ளிரவு முதல் இலங்கையில் லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.சற்றுமுன் கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, தற்போது 4,115 ரூபாவாக விற்பனை செய்யப்படும் 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,940 ரூபாவாகும்.அத்துடன் 5 கிலோகிராம் நிறைகொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டருக்கு ரூ.70 குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை ரூ.1,582 ஆக உள்ளது.மேலும் 2.3 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சிலிண்டரின் விலை ரூ.32 குறைக்கப்பட்டு அதன் புதிய விலை ரூ.740 என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *