வவுனியா நீர் நிலைப்பகுதி ஒன்றிலிருந்து அழுகிய நிலையில் சடலம் மீட்பு..!!

நேற்றய தினம் (05/03/2024) முதியவர் ஒருவரின் சடலம் ஒன்று வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர் நிலையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.கைவிடப்பட்ட கற்க்குவாரி பகுதியில் சடலம் இருப்பதாக ஓமந்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சடலம் அழுகிய நிலையில் உள்ளமையினால் சில தினங்களிற்கு முன்னராகவே இறந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஓமந்தை பொலிசார் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.