இதெல்லாமா பெருசா இருக்கனும்னு நினைப்பாங்க..!ரேஷ்மா பசுபுலேட்டி பேட்டி..!!

பாக்யலட்சுமி தொடரில் ராதிகாவாக ரேஷ்மா பசுபுலேட்டி நடித்துள்ளார். படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த இவர் தற்போது சின்னத்திரையில் தீவிரமாக நடித்து வருகிறார். இவர் நடிகர் பாபி சிம்ஹாவின் சகோதரி ஆவார் என்பது அதிக பேருக்கு தெரியாமல் இருக்கின்றது.2015 ஆம் ஆண்டு மசாலா படம் என்ற படத்தில் அங்கிதா என்ற கதாபாத்திரத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

அதன் பிறகு கோ 2, மணல் கயிறு 2 போன்ற படங்களில் நடித்தார்.ஏறக்குறைய 40 வயதான இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு ரசிகர்களின் இதயத்தில் ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.இவ்வாறு இருக்க சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றில் பேசிய போது எனது உதடுகள் பெரிதாக இருப்பதாக அனைவரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

மேலும் என் உதடுகள் பெரிதாக இருப்பதை நான் விரும்புகிறேன்.உதடுகள் என் உடம்புக்கும் முகத்துக்கும் பொருந்தும் வகையில் எப்படி இருக்க வேண்டும் என்ற வரையறையும் உள்ளது. அதன்படி நான் சிகிச்சை செய்து என் உதட்டை பெரிதாக்கிஉள்ளேன்.இதற்காக இந்த உதட்டை பெரிதாக்க எந்த வித அறுவை சிகிச்சையும் நான் மேற்கொள்ளவில்லை. இதனை பில்லர்ஸ் சென்று கூறுவார்கள் என அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.இது குறித்து இவரது பேச்சு இணையத்தில் வைரலாக பரவி மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.