அதிபரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவன்..!நீதி கேட்கும் பெற்றோர்..

நேற்று முன்தினம் (17) ஞாயிற்றுக்கிழமை அன்று 14 வயது சிறுவன் ஒருவன் மன்னார் கரிசல் பகுதியில் பாடசாலை அதிபரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.ஆனால், இது குறித்து பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட சிறுவனின் உறவினர்கள் குற்றம் சாட்டினர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,பாடசாலை சுற்றுப்புற சூழலை சுத்தம் செய்யும் நிகழ்வு என அறிவித்து குறித்த மாணவனை அழைத்து அதிபர் துஷ்பிரயோகத்தை மேற்கொண்டதாக தெரிய வருகிறது.

சம்பவம் தொடர்பில் மாணவன் பெற்றோருக்கு அறிவித்த நிலையில் பெற்றோர் ஞாயிற்றுக்கிழமை பாடசாலை சென்ற நிலையில் அதிபர் பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளார்.மறுநாள் திங்கட்கிழமை (18) பெற்றோர் பாடசாலை சென்ற நிலையில் அதிபர் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை . இந்த நிலையில் பாடசாலை நிர்வாகத்தினர் பாடசாலை அதிபர் மற்றும் மாணவனை அழைத்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.இருப்பினும் மாணவனின் குடும்பத்தினர் எருக்கலம் பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற நிலையில் அங்கு சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு இல்லை என அறிவிக்கப்பட்டு மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.அதேவேளை அதிபரால் குறித்த துஷ்பிரயோகம் இடம் பெற்ற போதிலும் அதிபர் சார்பாக சிலரின் அழுத்தம் மற்றும் சில நிர்வாகத்தினரின் அழுத்தம் காரணமாக குறித்த விடயம் மன்னார் பொலிஸாருக்கு தெரியப்படுத்த படவில்லை என தெரிய வந்துள்ளது.இந்நிலையில் சம்பவம் தொடர்பில் வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் சம்பந்தப்பட்ட பொலிஸ் பிரிவினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மாணவனை சட்டவைத்திய அதிகாரி முன்னிலைப்படுத்தி பாதிக்கப்பட்ட மாணவனுக்கு நீதியை பெற்று கொடுக்க வேண்டும் என மாணவனின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *