ஜனவரிமாதம் முதல் ஏற்படவுள்ள மாற்றம்..? அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..!

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு ஏப்ரல் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் அதேவேளை, அதில் பாதி தொகை ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் என ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவிக்கையில், பொதுமக்களுக்கு மேலும் சலுகைகள் வழங்கினால் நல்லது, ஏற்கனவே அதிகபட்ச நிவாரணம் வழங்கியுள்ளோம்.1.3 மில்லியன் அரசாங்க ஊழியர்களுக்கு மாதத்திற்கு 10,000 என்பது மாதத்திற்கு 13 பில்லியன் ரூபாயின் புதிய அதிகரிப்பு ஆகும். மறுபுறம், 730,000 ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ரூ.2,500 அதிகரிப்பு கிடைக்கும்.