பாடசாலை மேசையால் வந்த விபரீதம்..!!வீதியில் நடந்த கலவரம்..!

பாடசாலையில் வைத்து மேசையால் ஏற்ப்பட்ட வாய்த்தகராறு காரணமாக மாணவர் ஒருவர் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார்.குறித்த சம்பவம் ரிதிகம – உதம்மிட பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவம் மல்சிறிபுர – உதம்மிட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 15 வயதுடைய மல்சிறிபுர பிரதேசத்தை சேர்ந்த மாணவரே குறித்த தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.இவர் கடந்த 14ம் திகதி பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஹெல்மெட் மற்றும் கட்டையால் தாக்கியுள்ளனர்.இதையடுத்து சம்பந்தப்பட்ட மாணவன் பொலிஸாரில் புகார் செய்துள்ளார்.

தாக்குதலை நடத்தியவர்கள் கொகரெல்ல பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் ஒரு வாரத்திற்கு முன்னர் தனது பாடசாலையில் மேசை ஒன்று தொடர்பில் மாணவன் ஒருவனுடன் தகராறு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த மாணவனின் நண்பன் ஒருவன் தனக்கு தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மாணவன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.இந்த தாக்குதலின் போது தன்னை அச்சுறுத்தியவரும் சம்பவ இடத்தில் இருந்ததாக பாதிக்கப்பட்ட மாணவன் பொலிஸாரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்பில் மல்சிறிபுர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.