கிறிஸ்மஸ் விருந்தில் இடம் பெற்ற கொலை..!

கிறிஸ்மஸ் விருந்தொன்றின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிக்கடை, வல்பொல, விஜிதபுர மாவத்தையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

சம்பவத்தில் அங்கொட வல்பொல விஜிதபுர மாவத்தையைச் சேர்ந்த 46 வயதுடைய ரேணுகா என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.கொலைச் சம்பவம் தொடர்பில் 62 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுளதுடன், மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.