என்ன கொலை குற்றம் பண்ண மாதிரி இந்த ஓட்டம் ஓடுறாரு..! கேமராவை கண்டதும் நடிகர் விஷால் செய்த வேலை

தமிழ் திரைஉலகில் நடிகர் விஷால் ஹிட் படம் கொடுத்தே ஆக வேண்டும் என்ற நிலையில் இருந்தார். அவரது கடைசி படங்கள் எதுவும் சரியாக ஹிட் அடிக்கவில்லை,இவ்வாறு இருக்க இறுதியாக அவரது ரசிகர்களுக்கு அவர் கொடுத்த படம் தான் மார்க் ஆண்டனி.ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி விஷால், எஸ்.ஜே. சூர்யா, சுனில், செல்வராகவன், ரிது வர்மா என பலரும் நடித்து ரூ. 100 கோடி வரை பாக்ஸ் ஆபிஸில் வசூலித்து விஷால் திரைப்பயணத்தில் ஹிட் படமாக அமைந்தது.அண்மையில் யூடியூப் பேட்டியில் நடிகர் விஷால் பேசும்போது, திருமணம் என்பது சாதாரணமான விஷயம் இல்லை, அதற்கு புரிதல், பக்குவம் வேண்டும். திடீரென ஒரு முடிவு எடுத்துவிட்டு பின் என்ன இப்படி ஆகிவிட்டதே என யோசிக்கக்கூடாது.என கூறியிருந்தார்.

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இளம் பெண்ணுடன் விஷால் வலம் வரும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் விஷால் சற்று இளமையாக இருப்பதால், இது பழைய வீடியோவா அல்லது மாற்றப்பட்ட வீடியோவா என பல கேள்விகள் எழுந்துள்ளன.விஷாலை வீடியோஎடுப்பவர் அழைத்தவுடன் முகத்தை மறைத்துகொண்டு ஓடும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.