ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை..!!

கொழும்பில் பயணித்து கொண்டிருந்த‌ புகையிரதத்தில் ஏற முற்பட்ட இரண்டு பெண்கள் புகையிரதத்தின் இரண்டு பெட்டிகளுக்கு இடையில் சிக்கி படுகாயமடைந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.குறித்த சம்பவமானது நேற்றியதினம் (26.04.2024) கண்டி நோக்கி பயணிப்பதற்காக புகையிரதம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு வந்துகொண்டிருந்தவேளை நடை பெற்றுள்ளது.

அவ்வேளை இரண்டு பெண்கள் புகையிரதத்ததில் ஏற முயன்றபோது இரண்டு பெட்டிகள் நடுவில் இருவரும் சிக்குண்டுள்ளனர்.உடனடியாக புகையிரதம் நிறுத்தப்பட்டு அவர்களை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெற்றன இந்நிலையில் மீட்கப்பட்ட இருவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்