முகநூல் காதலியை நேரில் பார்க்க வந்தவருக்கு அதிர்ச்சி..!

நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் பேஸ்புக்கில் பெண் போல் கதைத்து நபர் ஒருவரை ஏமாற்றிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவத்தில் யாழ்ப்பாணம் – நெல்லியடியைச் சேர்ந்த இருவர் காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருகோணமலையைச் சேர்ந்த ஒருவருக்கு நெல்லியடியைச் சேர்ந்த ஒருவர் பெண் போல பழகி காதல் வலையில் வீழ்த்தி நெல்லியடிக்கு வரவழைத்துள்ளார்.

இந்த நம்பிக்கையில் நெல்லியடிக்கு வந்த திருகோணமலையைச் சேர்ந்த ஒருவரை கத்தியைக் காட்டி மிரட்டி பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் திருகோணமலையைச் சேர்ந்த நபர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.பின்னர் விசாரணையை தொடங்கிய பொலிஸார், இருவரை கைது செய்து கொள்ளையடித்த பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்தனர். விசாரணைகளை அடுத்து, சந்தேக நபர்களை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.