தந்தையை கோடரியால் வெட்டி கொலை செய்த மகன்..!! காரணம் என்ன.?

மனநலம் குறைந்த‌ மகனுக்கு மருத்து குடிக்க தந்தை வற்புறுத்தியதால் குறித்த மகன் தந்தையை கோடரியால் வெட்டி கொலை செய்துள்ளார்.குறித்த சம்பவம் அந்த பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிடிகல, களுஆராச்சிகொட பகுதியைச் சேர்ந்த பியதாச ஜயசிங்க என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.கொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் 47 வயது பிடிகல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அங்கொட மனநல வைத்தியசாலையில் நீண்டகாலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தவரின் மகன் மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.இதன்படி ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் நீதிமன்ற அனுமதியின் பேரில் குறித்த நபரை பெற்றோரிடம் ஒப்படைத்த வைத்தியர்கள் அவருக்கு தினந்தோறும் மருந்து வழங்குமாறு பரிந்துரைத்துள்ளனர்.

இதனையடுத்து நேற்று முன்தினம் (24) இரவு, மகனுக்கு தேவையான மருந்தை கொடுக்க தந்தை முயன்றபோது, ​​மகன் அதை எடுக்க மறுத்து, வீட்டில் பதுங்கி உள்ளார்.அதன்படி நாற்காலியில் அமர்ந்திருந்த தந்தையின் தலையில் கோடரியால் அடித்து மகன் கொலை செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேவேளை, கைது செய்யப்பட்ட மகன் இன்னமும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *