கூகுளுடன் போட்டி போடும் எலான் மஸ்க்..!! புதிய அப்டேட்..!

எலான் மஸ்க் எக்ஸ் மெயில் என்ற பெயரில் மின்னஞ்சல் வசதியை கூகுள் நிறுவனத்தின் ஜீ மெயிலுக்கு போட்டியாக விரைவில் அறிமுகம் செய்யக போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் தளம் ஆகியவற்றின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு கூகுளுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. எக்ஸ் நிறுவனத்தின் செக்யூரிட்டி இன்ஜினியர் குழுவில் பணியாற்றி வரும் நாதன் மெக்ராடி, எக்ஸ்-மெயிலை எப்போது அறிமுகம் செய்யப் போகிறோம் என ட்வீட் செய்திருந்தார்.

‘Its Coming’ என அதன் வரவு குறித்து மஸ்க், பதில் ட்வீட் செய்துள்ளார். இதன்மூலம் எக்ஸ்-மெயில் எனும் இ-மெயில் சேவை குறித்த சூசக தகவலை அவர் பகிர்ந்துள்ளார்.இந்த விடயம் இப்போது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *