யாரிடமும் சொல்லாமல் இறந்த கணவ‌ரின் சடலத்தை வீட்டில் பூட்டிவைத்திருந்த மனைவி..!!

பாணந்துறை தெற்கு பொலிஸார்களால் இறந்த கணவரின் சடலத்தை வீட்டினுள் 3 நாட்களாக பூட்டி வைத்திருந்த மனைவியை வீட்டின் கதவுகளை உடைத்து மீட்கப்பட்டுள்ளது. 52 வயதுடைய அத்தனாயக்க முதியன்சேலாகே ஜகத் பண்டார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.பாணந்துறை எடம்பகொடவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.பின்னர் பொலிஸார் அங்கு சென்று சோதனை நடத்தியபோது இறந்தவரின் மனைவி வளர்ப்பு நாயுடன் வீட்டின் கதவை பூட்டிவிட்டு உள்ளே இருந்துள்ளார்.

பின்னர், பொலிஸார் கதவுகளை உடைத்து உள்ளே சென்ற போது ​​படுக்கைக்கு அருகில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவரது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவரென பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.