துர்நாற்றம் வீசிய வீட்டை பார்க்கச் சென்ற பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

39 வயது பெண் ஒருவரின் சடலம் ஒன்று கந்தானை பிரதேச வீடு ஒன்றில் இருந்து இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.குறித்த மரணம் தொடர்பில் எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டதாக கந்தானை பொலிஸார் தெரிவித்தனர்.அதே பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கந்தானை வீதி மாவத்தையில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பிரதேசவாசிகள் கந்தானை பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது வீட்டில் பெண் ஒருவரின் சடலம் சிதைந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், உயிரிழந்தவர் கந்தானை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல ஸ்பா நிறுவனமொன்றில் சிகிச்சையாளராக கடமையாற்றிய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.