ஐம்பது ரூபாவால் ஏற்பட்ட கத்திகுத்து..!! சந்தேக நபர் கைது..!

ஐம்பது ரூபா பணத்திற்காக இரு நபர்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கத்திகுத்தில் முடிந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவமானது களுத்துறை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.இவ்வாறு கத்தியால் குத்தி காயத்தை ஏற்படுத்திய நபர் களுத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு காயமடைந்தவர் களுத்துறை – பலாதொட்டை பிரதேசத்தை சேர்ந்த கந்தபிள்ளை யோகநாதன் என்பவராவார். சந்தேக நபர் நேற்று (20) களுத்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.க‌ளுத்துறை தெற்கு பொலிஸார் மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.