16 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வேன் சாரதி..!

வேன் சாரதி ஒருவர் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார் இது குறித்து பொலிசார் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவர் பாடசாலை பஸ் சாரதியால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.மாணவியின் குடும்பத்தினர் எம்பிலிபிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த மாணவி பாடசாலைக்கு வராமல் பாடசாலை சீருடையுடன் வீதியில் நின்றதைஅவதானித்த நபர் ஒருவர் அதனை பாடசாலைக்கு அறிவித்துள்ளார்.இது தொடர்பில் பாடசாலை நிர்வாகம் மாணவியின் வீட்டுக்குத் தெரிவித்ததையடுத்து, குடும்பத்தினர் எம்பிலிபிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.புத்தகம் வாங்க கடைக்கு சென்ற தன்னை வேனில் ஏற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி கூறியுள்ளார்.வேன் பாணமுரே பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், வேனின் சாரதி பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பாணமுரே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.