முல்லைத்தீவில் வசித்துவரும் இலங்கையின் அதிசய மனிதர்..!!

இலங்கையில் மிகவும் உயரமான மனிதனாக முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் குணசிங்கம் கஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார்.குறித்த நபர் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு கைவேலி என்ற பகுதியிலேயெ வாழ்ந்து வருகிறார்.

இவர் 7 அடி 2 அங்குலம் உயரத்தினை கொண்டிருப்பதனாலேயே இலங்கையில் தற்போது உயரமான மனிதனாக இடம் பிடித்துள்ளார்.45 வயதான இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாகவும் மற்றும் முச்சக்கரவண்டி ஓட்டுநராகவும் இருந்து வருகிறார்.இவர் அதிக உயரமாக இருப்பதனால் முச்சக்கரவண்டிக்குள் அமர்ந்திருப்பது கூட கடினமானதாகும்.தனது அசாதாரண உயரம் காரணமாக பல பிரச்சனைகளை எதிர்கொண்டதாகவும்,

இலங்கையில் தனது கால் நீளத்திற்கு ஏற்ற பாதணிகளை கண்டுபிடிக்க முடியாமல் வெளிநாட்டில் இருந்து கொள்வனவு செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.பேருந்தில் இருக்கைகள் கிடைக்காதுவிட்டால் பயணிப்பது சிரமமானது எனவும் நீண்ட தூரம் பேருந்தில் பயணிப்பதாக இருந்தால் இருக்கைக்கு முன்பதிவு செய்ய வேண்டிய கட்டாயமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.