தம்பியால் அண்ண‌ணுக்கு நடந்த சோகம்..!! இரத்தினபுரியில் அரங்கேறிய கொடூரம்..!

இரத்தினபுரி பிரதேசத்தில் இளைய சகோதரர் கத்திரிக்கோலால் தாக்கியதில் மூத்த சகோதரர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இரு சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் குறித்த கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது.சம்பவத்தில் பலத்த காயமடைந்த நபர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

குருவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 17 வயதுடைய இளைய சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.கொலை தொடர்பில் மேலதிக விசாரணைகளை குருவிட்ட பொலிஸார் நடத்தி வருகின்றனர்.