பின் பக்கமாவந்து எனக்கு அந்த இடத்தில தாக்கினார்..!!நடிகை கீர்த்தி சுரேஷ் மீடியாவில் கூறிய தகவல்..!

கீர்த்தி சுரேஷ் தற்போது சினிமா திரைஉலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர்.இளம் வயதிலிருந்தே நல்ல கதாபாத்திரங்களை எடுத்து நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.நடிகை சாவித்ரி தேவியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட நடிகையர் திலகம் படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தில், ரஜினிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார் மற்றும் சர்கார், பைரவா, ரெமோ, ரஜினிமுருகன், தொடரி, மாமன்னன், சாமி 2, நடிகையர் திலகம் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமா ஆர்வலர்கள் மத்தியில் தனக்கென ஒரு நல்ல பெயரைப் பெற்றவர்.தமிழில் மட்டுமின்றி மலையாளத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இப்போது இந்தியிலும் அவர் நடிக்கிறார்.நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்று தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.நடிகை கீர்த்தி சுரேஷ் கூறுகையில், ஒரு நாள் நானும் எனது தோழியும் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தோம்.

அப்போது குடிபோதையில் ஒரு நபர் என் மீது விழுந்தார். அவர் குடித்துவிட்டு வந்து என் மீது விழ, நான் அவரை அறைந்து விட்டு சென்றேன்.சிறிது நேரத்தில் என் தலையில் ஏதோ பலமாக அடித்ததை உணர்ந்தேன். எனக்கு ஒருவித விபத்து ஏற்பட்டது. நான் இறந்துவிட்டதாக கூட உணர்ந்தேன்.ஆனால் அது அப்படி இல்லை. என்னிடம் அடிவாங்கிய அந்த ஆசாமி தான், திடீர் தாக்குதல் நடத்தி என் தலையில் அடித்துவிட்டு வேகமாக தப்பி ஓடுகிறான் என்பது எனக்கு தெரிந்தது.சில நிமிடங்களுக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. பின்னர், நானும் எனது தோழியும் அவரை விரட்டிச் சென்று பிடித்தோம்.பக்கத்தில் ஒரு போலீஸ் நிலையம் இருந்தது. அங்கு சென்று நடந்ததை சொல்லி அவனை போலீசாரிடம் ஒப்படைத்து விட்டோம், என்று கூறியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.இந்த தகவலை கீர்த்திசுரேஷ் நீண்ட நாட்கள் கழித்து மனம் விட்டு கூறியுள்ளார்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *