வவுனியா வைத்தியசாலையில் தாயுக்கும் சேயுக்கும் நடந்த சோகம்..!!

வவுனியாவில் கர்ப்பிணி பெண் ஒருவர் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கர்ப்பிணி தாய் நேற்று குளியலறையில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.இதன் போது கருவில் இருந்த குழந்தையும் இறந்ததாக கூறப்படுகிறது. மதவாச்சி பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குளியலறையில் இருந்து மீட்கப்பட்டு அவரது வயிற்றில் உள்ள குழந்தையை காப்பாற்றுவதற்கான முயற்சியை வைத்தியர்கள் மேற்கொண்டனர். எனினும் வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ளது.உயிரிழந்தவர்களின் சடலங்கள் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.