நடுவானில் ஹெலிகொப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து..!! பத்து பேர் பலி..!

மலேசிய கடற்படையின் இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் பத்து பேர் உயிரிழந்ததாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 

மலேசியக் கடற்படையின் 90-ஆம் ஆண்டு நிகழ்வுக்கான ஒத்திகையின் போது இந்த விபத்து ஏற்பட்டது.இன்று காலை 9 மணியளவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இந்த இரு ஹெலிகாப்டர்களும் மோதி விபத்துக்குள்ளானது.

உயிரிழந்தவர்களில் இந்தியரும் அடங்குவதாக கூறப்படுகிறது.HOM மற்றும் FENNEC ரக ஹெலிகாப்டர்களே ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தைத் தொடர்ந்து உடல்களை மீட்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.