ஒருகோடி ரூபா பெறுமதியான வலம்புரிசங்கு கடத்தல்..!! பௌத்த தேரர் உட்பட இருவர் கைது.!

பௌத்த தேரர் உட்பட இருவர் சட்டவிரோதமாக‌ வலம்புரி சங்கு கடத்தலில் ஈடுபட்ட குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.மாத்தறையில் இருந்து மட்டக்களப்புக்கு கடத்தப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியான வலம்புரிசங்கு கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்று மாலை கல்குடா பிரதேசத்தில் இருந்து அவர்களை விசேட அதிரடிப்படையினர் கைது செய்ததாக கல்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.