ஒரு மாணவியை காதலித்த இரு மாணவர்கள்..!! இறுதியில் கத்தி குத்தில் முடிந்த சம்பவம்..!

கம்பகாவில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவரை மற்றுமொரு மாணவர் கத்தியால் குத்தியதில், மேற்படி மாணவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து மேலும் தெரிய வருகையில்,மாக வித்தியாலயத்தில் கல்வி கற்கும் ஒரே மாணவியை தாக்குதல் நடத்திய மாணவனும், தாக்குதலுக்குள்ளான மாணவன் காதலித்து வந்துள்ளனர்.இதேவேளை, இரு மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தன்னுடைய காதலியான மாணவி மற்றுமொரு மாணவனை காதலிப்பதை அறிந்த 10ம் தர மாணவன், 9ம் தர மாணவனை பாடசாலை முடிந்ததும் பாடசாலைக்கு முன்பாக வைத்து தாக்கியதுடன் கத்தியால் குத்தியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.கத்திக்குத்து தாக்கியதில் மாணவன் தோள்பட்டை பகுதியில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வத்துப்பிட்டியால ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.