நடிகர் விஜயகாந்தின் உடல்நிலைக்கு ஆபத்தா..? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை…

நடிகரும், தே.மு.தி.கட்சி தலைவருமான விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என மியாட் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
சென்னை, மியாட் மருத்துவமனையில் காய்ச்சல் மற்றும் சளி பாதிப்புகளுக்காக, கடந்த 18ம் திக்தி தே.மு.தி.க.தலைரும்,நடிகருமான விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார்.அவரது உடல் நிலை சீராக உள்ளது என்னும் ஓரிரு தினங்களில் வீடு திரும்பலாம் என வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்தது

இந்நிலையில் விஜய்காந்த் உடல்நிலை குறித்து தற்போது மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜயகாந்த் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது,எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால் அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது.
தொடர்ந்து என்னும் 14 நாட்கள் அவர் சிகிச்சை பெறவேண்டும் என கூறியுள்ளனர்.