தனித்து வாழ்ந்த மூதாட்டிக்கு நடந்த கொடுமை..!! யாழில் அதிகாலை அரங்கேறிய சம்பவம் சம்பவம்..!

யாழ்பாணத்தில் வீடோன்றில் தங்கியிருந்த வயோதிப பெண் ஒருவருடைய‌ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மேலும் தெரியவருகையில் நேற்று(01.05.2024) அதிகாலை யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலைப் பகுதியிலுள்ள வீடொன்றில் தனித்திருந்த வயோதிபப் பெண்ணின் தங்க நகைகள், பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இதன் போது வீட்டில் இருந்து மூன்று பவுன் தங்க நகைகள் மற்றும் சுமார் 25 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.வீட்டின் ஓட்டைப் பிரித்து உள்நுழைந்த 3 பேரைக் கொண்ட கும்பல் ஒன்று கொள்ளையில் ஈடுபட்டுள்ளது.குறித்த கும்பல் மூதாட்டியின் வாயைப் பொத்தி மிரட்டி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், சம்பவ இடத்துக்குச் சென்ற தடயவியல் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்தனர்.இதேவேளை, குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.