அவுஸ்திரேலியா செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு நற்செய்தி..!!

தொழில் மற்றும் கல்வி நடவடிக்கைக்காக‌ அவுஸ்திரேலியா செல்ல காத்திருக்கும் இலங்கையர்களின் கனவை நனவாக்கும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளது.எதிர்வரும் சனிக்கிழமை (04/05/2024) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொழும்பு 5 ஹெவ்லொக் சிட்டியில் இந்த நிகழ்ச்சி இலவசமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு சரியான முறையில் செல்வதற்கு வழிகாட்டுவதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வேலைத்திட்ட நிகழ்வில் அவுஸ்திரேலியாவின் பிரதான குடியேற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், சட்டதரணிகள் இதில் கலந்துக் கொள்ளவுள்ளனர்.மாணவர் விசாக்கள் மற்றும் ஸ்பான்சர் விசாக்கள் உட்பட அனைத்து விசாக்களும் பெற்றுக் கொள்ளும் முறை இங்கு சுட்டி காட்டப்படும்.

அத்துடன் இதன்போது, சரியான பல்கலைக்கழம் ஒன்றை தெரிவு செய்தல், குடியுரிமை பெற்றுக் கொள்வதற்கான பாடநெறியை தெரிவு செய்தல், புலமைப்பரிசிலுக்கு அவசியமான தகுதி பெறுதல் ஆகியவை தெளிவுப்படுத்தப்படவுள்ளது.மேலும், புலமைப்பரிசிலுக்கு ஈடுபடுத்தல், நிதி தேவைக்காக சரியான ஆலோசனை வழங்குதல் மற்றும் தொழில் விசாவுக்கு அவசியமான அனுசரனைக்கு தொடர்புக் கொள்ள வேண்டிய சரியான வழிமுறை தொடர்பில் இதன் போது தெளிவுப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.