Profile Photo-வை பாதுகாக்க வட்ஸ்அப் அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய அப்டேட்..!!

வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம்.இந்த தளம் மெட்டா குழுவில் சேர்க்கப்பட்ட பிறகு, அதை மேலும் மேம்படுத்த பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த வகையில் மெட்டா நிறுவனம் இப்போது பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வசதியை உருவாக்கி வருகிறது.WhatsApp-ல் பயனர்களின் Profile புகைப்படத்தை Screenshot எடுப்பதை தடுப்பதற்கான புதிய வசதியை Meta கொண்டு வர உள்ளது.

ஏற்கனவே, விருப்பப்பட்ட பயனர்களுக்கு மட்டும் தங்களது Profile புகைப்படத்தை காண்பிக்குப்படியும், மற்றவர்களுக்கு Profile புகைப்படம் காண்பிக்கப்படாத வசதி இருக்கிறது.இந்த நிலையில், WhatsApp-ல் பயனர்களின் Profile புகைப்படத்தை Screenshot எடுப்பதை தடுப்பதற்கான புதிய வசதியை Meta கொண்டு வர உள்ளது.இந்த அம்சம் பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு அவர்களின் அனுமதியின்றி சுயவிவரப் புகைப்படங்களை எடுப்பதையும் தடுக்கிறது.ஏற்கனவே, இந்த வசதி Instagram, Google Pay, Paytm, Phone Pay உள்ளிட்ட App-களில் இருக்கும் நிலையில், தற்போது Meta நிறுவனம் WhatsApp-லும் கொண்டு வர உள்ளது.இந்த வசதி முதலில் Android பயனர்களுக்கு கிடைக்கின்றன. மேலும், விரைவில் iPhone பயனர்களுக்கும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.