ஸ்டேட்டஸ் குறித்து வாட்ஸ் அப் அறிமுகபடுத்த போகும் புதிய அப்டேட்..!!

மெட்டா நிறுவனம் தற்போது வாட்ஸ் அப் செயலியில் ஸ்டேட்டஸ் வைக்கும் போது ஒரு குறிப்பிட்ட நபரை டெக் செய்து ஸ்டேட்டஸ் வைக்கும் வசதியை கொண்டு வர உள்ளதாக தெரிவித்துள்ளது.தற்போது மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப் செயலியை மேம்படுத்தும் வகையில் பல புதிய அம்சங்களை வழங்கி வருகிறது.தற்போது வாட்ஸ் அப் செயலியானது உலகெங்கும் அதிகளவான மக்களின் பாவனையில் உள்ளது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் (Instagram) நாம் ஒரு ஸ்டோரி வைக்கிறோம் என்றால் அதில் நமக்கு தெரிந்தவர்களை டெக் செய்து வைக்க முடியும். இதே வசதியை தற்போது வாட்ஸ் அப் செயலியின் ஸ்டேட்டஸிலும் அறிமுகப்படுத்தயிருக்கிறது.வாட்ஸ் அப் செயலியின் ஸ்டேட்டஸ் இல் ஒரு குறிப்பிட்ட நபரை டெக் செய்து ஸ்டேட்டஸ் வைக்கும்போது, அறிவிப்பானது (Notification) சம்பந்தப்பட்ட நபருக்கு சென்றுவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் வாட்ஸ் அப் செயலியின் இந்த புதிய வசதி சமீபத்திய பதிப்பிலும் (Latest version) கிடைக்க கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *