ஏன் இப்புடி எல்லாம் கேக்குறிங்க..!! எனக்கு வயது 17 தான் ஆகுது..அனிகா ஓபன் டாக்..!

முன்னதாக மலையாள படங்களில் நடித்த அனிகா, கவுதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்ததன் மூலம் புகழ் பெற்றார்.அதன்பிறகு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், தெலுங்கு, மலையாள படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். தற்போது அனிகா தனுஷ் இயக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் நடிக்கிறார். இப்படம் தனக்கு திருப்புமுனையை கொடுக்கும் என நம்புகிறார் அனிகா.

இவர் சினிமாவில் மட்டு மன்றி சமூக ஊடகங்களிலும் மிகவும் பிஸியாக இருக்கின்றார். புதிய பட வாய்ப்புகளைப் பெறவும், தனது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தவும் அடிக்கடி கவர்ச்சியான‌ புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் அனிகா அளித்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

அந்தப் பேட்டியில், ‘நீங்கள் பீர் அருந்துவீர்களா? இல்லை ஒயின் அருந்துவீர்களா..? என்று ஒருவர் கேள்வி கேட்டுள்ளார்.அதற்கு பதிலளித்த அனிகா, “எனக்கு இப்போது 17 வயதுதான் ஆகிறது. அதற்கு இந்த மாதிரி கேள்வி கேட்குறீங்க. இப்படியெல்லாம் கேள்வி கேட்காதீங்க” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *