யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் மர்ம முறையில் மரணம்..!!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் கொழும்பு வெள்ளவத்தையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவத்தில் 49 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தாயார் என்பதுடன், குறித்த பெண்ணின் கணவர் நேற்றுமுன்தினம் தனிப்பட்ட தேவைகளுக்காக யாழ்ப்பாணம் சென்றிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று மகன் வீட்டில் படித்துக் கொண்டிருந்த போது கட்டிடத்தின் 8வது மாடிக்கு சென்று அதிலிருந்து குதித்துள்ளமை விசாரணையில் தெரியவந்தது. உயிரிழந்த பெண்ணின் சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில்,சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.