யாழ் கடற்கரையில் கரை ஒதுங்கிய புத்த பெருமானின் மிதப்பு ரதம்..!

யாழ். வடமராட்சி பகுதியில் அலங்கரிக்கப்பட்ட புத்தர் தேர் கரை ஒதுங்கியதை ஏராளமானோர் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.சமீபகாலமாக வடமராட்சி கிழக்கு பகுதியில் பல்வேறு மர்ம பொருள்கள் மற்றும் அலங்கரிக்கப்பட்ட மிதப்புக்கள் கரை ஒதுங்கின்றன‌.யாழ். வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரையில் சந்தேகத்துக்கிடமான படகொன்று கரையொதுங்கியுள்ளது.

மேலும், வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் பௌத்த கொடியுடன் மிதப்பு ஒன்றும், மூடிய கொள்கலன் ஒன்றும் கரை ஒதுங்கியிருந்தது.மறுபுறம் நாகர்கோவில் பகுதியிலும் மரத்தினாலான மிதப்பு ஒன்றும் அண்மையில் கரை ஒதுங்கியமை குறிப்பிடத்தக்கது.