வவுனியா க‌ல்குவாரி ஒன்றில் இருந்து கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் சடலமாக மீட்பு..!

கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் ஒருவரின் உடல் ஒன்று வவுனியா வீரபுரத்தில் உள்ள கல்குவாரியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிசார் தெரிவித்தனர்.இது குறித்து மேலும் அறிகையில்,குறித்த நபர் வவுனியா, வீராபுரத்தை வசிப்பிடமாகவும், கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயத்தில் ஈடுபட்டு வந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் குறித்த நபரை கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போன நிலையிலே நேற்று(08) மாலை குறித்த நபர் விவசாய செய்கையினை மேற்கொள்ளும் காணிக்கு அருகில் உள்ள கல்குவாரி குழியில் உள்ள நீரில் மிதந்த நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, சடலம் செட்டிகுளம் பொலிசாரால் இரவு மீட்கப்பட்டதுடன், சடலத்தினை திடீர் மரண விசாரணை அதிகாரி க.ஹரிபிரசாத் பார்வையிட்டிருந்தார். 03 பிள்ளைகளின் தந்தையான சுப்பையா மருதன் என்ற 78 வயதுடைய முதியவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவரார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.