ஒன்லைன் தளங்களில் இருந்து பூனைகளை தத்தெடுத்து கொலை செய்யும் நபர்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!

தென் கொரிய நபர் ஒருவர் 70க்கும் மேற்பட்ட பூனைகளை மனிதாபிமானமற்ற முறையில் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளன.ஒரு பூனை தனது காரைக் கீறி சேதபடுத்தியதால் மற்ற பூனைகள் மீதும் வெறுப்பு ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அதனால் தான் பூனைகளை கொன்றேன் என அவர் கூறியுள்ளார்.

குற்றவாளி டிசம்பர் 2022 மற்றும் செப்டம்பர் 2023 க்கு இடையில் 70இற்கும் மேற்பட்ட பூனைகளை கொலை செய்துள்ளார்.குறிப்பாக பூனைகளை கொலை செய்வதற்காக அவர் ஒன்லைன் தளங்களில் இருந்து அவற்றை தத்தெடுத்து பின்னர் கொடூரமாக கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும் சமீபத்திய ஆண்டுகளில் நாட்டின் மிகக் கொடூரமான விலங்கு கொடுமை வழக்குகளில் ஒன்றாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது.