வீதியில் திடீர் என‌ தோன்றிய குழி..!! வீதி முடக்கம்..!

பாதையில் பாரிய குழி ஒன்று தோன்றி அப்பகுதியில் போக்குவரத்திற்கு பாரிய சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.குறித்த குழியானது கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் பிரதான வீதி ஒன்றின் பாதையில் ஏற்பட்டுள்ளது.வீதியின் உட்புறத்தில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக இந்த குழி தோன்றியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதி பாதுகாப்பு நோக்கங்களுக்காக மூடப்பட்டுள்ளதுடன் அங்கு சற்று வாகன நெரிசல் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.