நடிகர் அஜித்துக்காக போலிஸ்ல எல்லாம் அடிவாங்கி இருக்கன்..!! நடிகர் கவின் ஓபன் டாக்..!

விஜய் டீவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் கவின். தற்போது தமிழ் சினிமாவில் முக்கியமான வளர்ந்து வரும் ஹீரோவாகி வருகிறார்.”லிப்ட்” மற்றும் “டாடா” படங்களின் மூலம் அவர் ஒரு பிரபலமான ஹீரோவாக மாறிவிட்டார்.

கவினின் அடுத்து வரவிருக்கும் படம் ஸ்டார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் கவின் கைவசம் தற்போது இரண்டு திரைப்படங்கள் உள்ளன. இதில் ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மற்றொரு படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைபெறவுள்ளது என அவரே கூறியுள்ளார்.இந்நிலையில் கவின் ஒரு பேட்டியில் அஜித்தை பற்றி மனம் திறந்து பேசிய விடயம் தற்போது பரவலாகி வருகின்றது.இதில் “அஜித் ரசிகன் என்று சொல்லவதை விட, அஜித் வெறியன் என்று சொல்லலாம்.

ஒரு முறை எங்கள் ஊரில் விஜய் மற்றும் அஜித் இருவருடைய படமும் ஒரே நாளில் வெளியானது. அந்த சமயத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த போலீஸுக்கும் ரசிகர்களுக்கும் மோதல் ஏற்பட்டதால், அந்த கூட்டத்தில் எனக்கும் அடி விழுந்தது” என கூறினார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *