எனக்கு ஒரு நாளாவது அப்படி இருக்கனும்..!! நடிகை திரிஷாவின் வில்லங்க ஆசை..ஓபன்டாக்..!

தற்போது தமிழ் திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை திரிஷா முதன் முதலில் ஜோடி என்ற‌ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல தென்னிந்திய படங்களில் நடித்துள்ளார் திரிஷா அவரது ஆரம்ப நாட்களில் ஜோடி திரைப்படத்தில் துணை வேடத்தில் நடித்து மௌனம் பேசியதே படத்தில் கதாநாயகியாக நடித்து சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதை பெற்றிருக்கிறார்.

இவர் நடிப்பில் வெளி வந்த சாமி, கில்லி போன்ற படங்கள் ரசிகர்களின் மத்தியில் பெரிதாக பேசப்பட்டதோடு இவரை கனவு கன்னியாக நினைக்கவும் வைத்தது. தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த இவர் இரண்டாவது இன்னிங்சிலும் கலக்கி வருகிறார்.இப்படியாக மணிரத்னத்தின் வரலாற்று படமான பொன்னியின் செல்வன் முதல் பாகம், 2ம் பாகங்களில் குந்தவையாக நடித்து இளைஞர்கள் மனதில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.

எவர்கிரீன் நடிகை என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை திரிஷா இதனை அடுத்து அண்மையில் தளபதி விஜய் உடன் இணைந்து லியோ படத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்.தர்போது அஜித்தின் விடாமுயற்சி, கமல் ஹாசனின் தக் லைப் போன்ற முன்னணி ஹீரோக்கள் படங்களை லைன் அப் வைத்து இருக்கிறார்.இந்நிலையில் நடிகை திரிஷா பேசிய பழைய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த பேட்டியில் , “எனக்கு எப்போதுமே ஒரு சின்ன ஆசை இருக்கு, அது என்னவென்றால் ஒரு நாளைக்காவது ஆணாக இருக்க வேண்டும் என்று”.”ஒரு பையனாக இருப்பது எப்படி, அவர்களின் உடல் அமைப்பு, அவர்களின் மனநிலை பற்றி தெரிஞ்சிக்கணும் ஆசை இருக்கிறது. இது தொடர்பாக நான் என்னுடைய அம்மாவிடம் சொல்லிக்கொண்டே இருப்பேன்” என்று திரிஷா தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து திரிஷாவின் இந்த விபரீதமான ஆசையை அவர் ஓப்பனாக சொல்லி இருப்பதை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் இது எப்படி சாத்தியம் ஆகும் என்று பேசி வருவதோடு வில்லங்கமான ஆசை இப்படி திரிஷாவுக்கு ஏற்பட்டு இருப்பதை நினைத்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *