வவுனியாவில் நடந்த ஏ.ரி.எம் கொள்ளை..!! தீவிர வேட்டையில் பொலிஸார்..!

வவுனியாவில் பெண்ணொருவரின் ATM அட்டையில் இருந்து 37,000 ரூபா பணம் திருடப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (05/05/2024) இடம்பெற்றுள்ளது.வவுனியா மாவட்ட செயலகத்தில் உள்ள அரச வங்கியின் ஆட்ம் இல் இருந்து பெண் ஒருவர் பணம் எடுக்க விரும்பிய போது, ​​நபர் ஒருவர் பணம் எடுப்பதற்கு உதவி புரிவது போல் நடித்து அட்டையை இயந்திரத்தினுள் சிக்கவைத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து வங்கி பாதுகாப்பு அலுவலகரை தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து பாதுகாப்பு அலுவலகரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கமைய, வங்கியிலிருந்து 37ஆயிரம் ரூபா திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.இந்நிலையில், கொள்ளை சம்பவம் தொடர்பாக வங்கியில் உள்ள‌ சி.சி.ரி.வி. கமெராவின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *