ஆஸ்துமா பிரச்சனையை தூண்டும் ஐந்து உணவுகள்..!!

ஆஸ்துமா என்பது மூச்சு விடுவதற்கு சிரமபடுத்தும் ஒரு நோயாகும்.இது சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை சிலருக்கு ஏற்படுவரும் ஒரு சிக்கலான நோயாகும்.மூச்சுக்குழாய்கள் வீங்கி குறுகியிருக்கும் ஒரு நிலை ஆஸ்துமா எனப்படும்.சில ஆரோக்கியமான உணவுகள் கூட ஆஸ்துமா வருவதற்கு வழிவகுத்து விடும்.அதை பற்றி தற்போது பார்ப்போம்.

முட்டை
முட்டை ஆரோக்கியமான உணவுப் பொருளாக இருந்தாலும், ஆஸ்துமாவை தூண்டும். நமது உடல் முட்டையில் உள்ள புரோட்டீன்களுக்கு ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யும். இந்த ஆன்டிபாடிகள் மூச்சுத்திணறல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.

மீன்
மீனில் பார்வால்புமின் என்ற புரோட்டீன் காணப்படுகிறது. இந்த பர்வால்புமின் சிலருக்கு அழற்சியை ஏற்படுத்தும். மேலும் மீன் சாப்பிடாதவர்கள் அவற்றை சாப்பிடும்போது, ​​அது ஆஸ்துமாவைத் தூண்டும்.

கோதுமை
கோதுமையில் உள்ள புரோட்டீனானது காற்றுப்பாதைகளை எரிச்சலடையச் செய்து வீக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. தற்போது கோதுமை பல உணவுகளில் காணப்படுகிறது. எனவே ஆஸ்துமா இருப்பவர்கள் கோதுமையை உணவில் சேர்க்கும் முன், ஒருமுறை மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

பால்
பால் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. பசுவின் பால் சுமார் 80 சதவீத குழந்தைகளில் ஆஸ்துமா அறிகுறிகளைத் தூண்டுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

வேர்க்கடலை
வேர்க்கடலையில் உள்ள புரோட்டின் சுவாசப் பாதைகளில் அழற்சியை ஏற்படுத்தி, ஆஸ்துமா அறிகுறிகளை தீவிரப்படுத்தலாம்.எனவே உங்களுக்கு வேர்க்கடலை சாப்பிட்ட பின் ஏதாவது வித்தியாசமான அறிகுறிகளை உணர்ந்தால், உடனே வேர்க்கடலையை உணவில் இருந்து அகற்றுங்கள்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *