நிலவும் வறண்ட காலநிலையால் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்..!!மக்களுக்கு எச்சரிக்கை..

சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக தோல் நோய்கள் நாடு முழுவதும் பரவி வருவதாகவும், இதனால் சிறுவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் பகல் நேரத்தில் குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்ற இடம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.போதுமான தண்ணீர் மற்றும் திரவங்களை குடிக்க அனுமதிக்காவிட்டால் குழந்தைகள் வெப்ப அதிர்ச்சிக்கு ஆளாகி இறக்க நேரிடும் என்றும் வைத்தியர் கூறியுள்ளார்.

நீர்ச்சத்து குறைபாடு, சோர்வு, தலைவலி, வாந்தி, தூக்கம், பசியின்மை, போன்ற காரணங்களால் குழந்தைகள் உடல்நிலை சரியில்லாமல் குழந்தைகள் இருப்பதாகவும் வைத்தியர் சுட்டிக்காட்டினார்.குழந்தைகளுக்கு இரண்டு முறையாவது குளிப்பதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும், தோல் நோய் உள்ளவர்கள் காலை மற்றும் இரவில் சுமார் 20 நிமிடங்கள் தண்ணீரில் இருந்தால், ஓரளவுக்கு நிலைமையை கட்டுப்படுத்தலாம்.இன்னும் இரண்டு மாதங்களுக்கு இந்நிலை ஏற்படக்கூடும் என்பதால் அதிகளவு தண்ணீர் அருந்துமாறு குழந்தைகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்குவது அவசியம் எனவும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *