இலங்கை பொலிஸ் உத்தியோகஸ்தரகளுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்..!!

இன்று (13-02-2024) முதல் நாட்டிலுள்ள பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு முதல் உணவு மற்றும் தங்குமிட கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, முதற்கட்டமாக அடுத்த ஆறு மாதங்களுக்கான கொடுப்பனவு பொலிஸாருக்கு வழங்கப்படவுள்ளதுடன், அடுத்த கட்டமாக நிலுவைத் தொகையுடன் அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு பொலிஸாருக்கு வழங்கப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தெரிவித்தார்.

மேலும், பொலிஸாருக்கு வழங்கப்படும் உணவு மற்றும் தங்குமிட கொடுப்பனவு 18,930 ரூபாய் முதல் 25,140 ரூபாய் வரை அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.