நோன்பு காலத்தில் மாணவர்களுக்கு நேர்ந்த கொடுமை..!! ஆசிரியரின் மோசமான செயல்..!

தற்போது உள்ள காலநிலையை கருத்தில் கொள்ளாது மாணவர்களை தண்டனை என்ற பெயரில் சுடும் வெயிலில் நிறுத்திய சம்பவமொன்று அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை காவல்துறை பிரிவிற்குட்பட்ட மருதமுனை மதரஸா ஒன்றில் பதிவாகியுள்ளது.தற்போதைய கடும் வெப்பமான காலநிலையில் நீண்ட நேரம் வெளியில் செல்ல வேண்டாம் என சுகாதார அமைச்சும் கல்வி அமைச்சும் அறிவுறுத்தியுள்ள நிலையில் மருதமுனை மதரஸா மெளலவி ஒருவர் மாண்வர்கள் மீது இவ்வாறான சித்திரவதைகளை மேற்கொண்டுள்ளார்.

மேலும் இச்சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் சிறுவர்களை இவ்வாறு வெளியில் ழுழங்காலிட செய்வது பாவமில்லையா என்று கேட்டதற்கு அதை கேட்க நீங்கள் யார் என்று ஆலிம் அல்லது மொளலவி கேட்டது அதிர்ச்சியை அளித்துள்ளது.புனித ரமழான் மாதத்தில் நோன்பாளியாக இருக்கும் நிலையில் சிறு வயதை உடைய இம்மாணவர்களின் நிலைமை குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.இச்சம்பவம் கடந்த ஆண்டு கம்முனையில் உள்ள மதரஸாவில் காத்தான்குடியை சேர்ந்த மாணவனின் மரணத்தை நினைவுப்படுத்துகிறது.இவ்வாறான நிலையில் மதரஸா இருக்கும் மாணவர்கள் அங்கு இருக்க முடியாமல் வாழ முடியாமல் தப்பியோடிவரும் சூழலும் இலங்கையில் இருக்கின்றன.

மேலும் மதரஸாவில் எதாவது சம்பவம் நடந்தால் அதை பெற்றோருக்கு அறிவிப்பதற்கும் வாய்ப்பு இல்லை. இப்படியொரு தவறான வழிநடத்தல் தான் இலங்கையில் இடம்பெற்று வருகின்றது.இதுபோன்றுதான் இலங்கையில் தொடர்ச்சியாக நடத்துகொண்டு வருகின்றது. இதனை அரசாங்கம் கேக்க போனால் எங்களுடைய விடயத்தில் தலையிட வேண்டாம் அதை நாங்கள் பாத்துகொள்கிறோம் என புத்தசீவிகள் கூறிகின்றனர். இதற்கு சில அரசியல்வாதிகளும் துணை போகின்றனர். இவ்வாறான ஒரு சூழல்தான் இலங்கையில் இருந்து வருகின்றது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *