மகனுக்கு விஷம் கொடுத்து தானும் உயிரை விட்ட தந்தை..!!

விஷம் அருந்தி தந்தையும் மகனும் உயிரை விட்டுள்ள சம்பவம் ஒன்று அங்குனகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தந்தை மகனுக்கு வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்து கொன்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.குறித்த சம்பவம் நேற்று (14.2.2024) மாலை நடந்திருப்பதாக அங்குனகொலபெலஸ்ஸ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

50 வயதுடைய தந்தை தனது 20 வயது மகனுக்கு பலவந்தமாக விஷம் வைத்து கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.தந்தை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது. உயிரிழந்த தந்தை மற்றும் மகனின் சடலங்கள் அங்குனகொலபெலஸ்ஸ மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.