பிணங்களைத் தேடி புதைகுழிகளை தோண்டும் கும்பல்..!! எதனால் இப்படி செய்கிறார்கள்..?

போதைப்பொருள் பாவனையானது சியரா லியோன் நாட்டில் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதனிடிப்படையில் இவர்கள் குஷ் ரக போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் இந்த குஷ் ரக போதைப் பொருளானது மனித எலும்புகளில் இருந்து உருவாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.கடந்த 6 வருடங்களாக இந்த குஷ் ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் புழக்கத்திலிருந்து வருகிறது.

சியரா லியோனில் இதுவரை 100 மேற்பட்ட புதைகுழிகளை இந்த கும்பல் தோண்டியுள்ளதாக அந்த நாட்டுக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த போதைப் பொருள் அடிமைத்தனத்தில் இருந்து மக்களை மீட்க ஒவ்வொரு மாவட்டத்திலும் போதைப்பொருள் தடுப்பு மையங்கள் அமைக்கப்படும் என்றும், போதைப்பொருள் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சியரா லியோன் அதிபர் எச்சரித்துள்ளார்.