தகராறு காரணத்தால் மனைவியின் கால்களை வெட்டிய கணவன்..!!

தன் மனைவியின் இரண்டு கால்களையும் வெட்டி எடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.காலி, புஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு தனது மனைவியின் கால்களை வெட்டியுள்ளார்.குடும்ப தகராறு காரணமாக நேற்று இரவு அந்த நபர் தனது மனைவியின் கால்களை வெட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர் பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக பணிபுரியும் 34 வயதுடைய பெண் ஆவார்.குற்றத்தைச் செய்த பின்னர், சந்தேகநபரான கணவர் கையடக்கத் தொலைபேசியுடன் வீட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.ஆபத்தான நிலையில் இருந்த 34 வயதான மனைவி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சந்தேக நபரான‌ கணவர் 2018 ஆம் ஆண்டு இராணுவத்தில் கடமையாற்றி சட்டவிரோதமான முறையில் இராணுவத்தை விட்டு வெளியேறியவர் எனவும் அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.