டிக்-டொக்கை பின் தள்ளிய இன்ஸ்டாகிராம்..!!

அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக கடந்த ஆண்டு சர்வதேச ரீதியில் இன்ஸ்டாகிராம் முதலிடத்தை பிடித்துள்ளது.உலகில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் டிக் டாக்கை பின் தள்ளி இன்ஸ்டாகிராம் முந்தியுள்ளது.சென்சார் டவரின் கூற்றுப்படி, 2023 இல் இன்ஸ்டாகிராம் பதிவிறக்கங்கள் 20 சதவீதம் அதிகரித்துள்ளதோடு, மேலும் இந்த செயலி மொத்தம் 767 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

இதன்மூலம், உலகிலேயே அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி என்ற பெருமையை ‘இன்ஸ்டாகிராம்’ பெற்றுள்ளது.இதன்படி இன்ஸ்டாகிராம் செயலி 767 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்ட நிலையில், டிக்டொக் 733 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டிருப்பதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்த மிகப்பெரிய வளர்ச்சிக்கு இன்ஸ்டாகிராமின் “ரீல்ஸ் வசதி” முக்கிய காரணம் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், இன்ஸ்டாகிராம் கடந்த சில ஆண்டுகளாக டிக்டொக்கை மிஞ்சும் வகையில் அதிகமாக காணொளிகள் பதிவேற்றப்படுகின்றன.அதன் ரீல்ஸ் அம்சம் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது என்று சென்சார் டவரின் மூத்த நுண்ணறிவு அதிகாரி ஆபிரகாம் யூசெப் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *